Monday, November 30, 2026

வளியே!

பெருமரம்
தன் ஆயிரமாயிரம் நாவுகளால்
அதை அசைத்துப் பாடவும்,

அலைகளின்றி அமைதியான
ஏரி
விழிமூடி மெய்மறந்து அனுபவித்துச்
சிலிர்த்துக் கொண்டயிருக்கவும்,

உன் தலை முடிகோதி விளையாட
நீ பெருவெளி வருவதற்காகவே எப்போதும்
உன் சிரசுமீதே
வான்பொருளாய்
மாறா உறுதியுடன் நிற்கவும்,

பற்றினால் வாடிவிடும் மலரை
பற்றாமல் வருடிக்கொண்டேயிருக்கவும்,

செல்லும் வழி கண்டுகொண்ட
வளியே, நீ வாழி!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP