Wednesday, May 22, 2024

ஏரி

போகிற போக்கில்தான்
ஏரியினை வருடிச் செல்கிறது காற்று.
ஏதோ ஒன்றுதான்
கணமும் விடாது அதனைப்
பற்றிக் கொண்டு கிடக்கிறது.

Read more...

Monday, May 20, 2024

அவன் தன் அமெரிக்க நண்பர்களுக்கு

அவன் தன் அமெரிக்க நண்பர்களுக்கு
ஆர்வத்துடன் பிதற்றும் கவிதை இது:

எல்லாம் எத்துனை சுலபமாகவும்
வேடிக்கையாவும் விளையாட்டாகவும்
இருக்கின்றன!
ஆறுக்கு ஆறு அடியுள்ள இரட்டைக் கட்டிலில்
குறுக்கே ஒரு திரை.
பத்தடி தூரத்தில்
எதிர் எதிரே உரையாடிக் கொண்டிருக்கும்
இரண்டு சன்னல்களையும் பற்றி
இணைத்தபடி நீண்ட கொடிக்கம்பியில்
நன்றாய்த் தொங்கும் அது.

இந்தப் பக்கம்,
அவன் வாசிப்புக்கும், கவிதையாக்கலுக்குமான
மின்விளக்கின் பேரொளி

அந்த பக்கம்,
அவன் துணைவியார் நல்லுறக்கத்துக்குகந்த
நயமான இருள்.

உறக்கமற்ற இரவில் அவன் துணைவியார்
உடல் அலுங்காமல் திரைவிலக்கி
எட்டிப் பார்த்துக் கொள்கிறார்…


கவிதைக் களம் என்ற இணைய இதழில் வெளிவந்தது.

Read more...

Friday, May 17, 2024

புதிய ஏற்பாடு – நீள் கவிதை - நீலி இதழில்

1
பூமியெங்கும் படர்ந்திருந்த
பேருடல் உயிரொன்றை
பூமியிலிருந்தே அழித்து விட்டவள் நீ

முழுக் கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Read more...

Wednesday, May 15, 2024

கவிதையின் இயல்பு

கவிதை என்பது
(வாழ்வு என்பதும்)
ஒரு பெரும் களியா?
பெரும் துயரா?
பேரின்மையா?

எதுவானாலும்
பெருங்களியை மய்யமிட்டுத்தானே
சுற்றி சுற்றி கும்மியடிக்கின்றனர்?

இன்மையிலிருந்து வரும் இசையும்
இருப்பிலிருந்து வரும் இசையும்
பெருங்துயரிலிருந்து வரும் இசையும்
தொட்டுத் தொட்டு
இன்பத்தையும் கொண்டாட்டத்தையும்தானே
எழுப்புகின்றனர்?

கவிதையின் இயல்பு
பெருங்களிதான் என்பதை
நாம் கற்றுக் கொண்டுதானே இருக்கிறோம்?

Read more...

Monday, May 13, 2024

காதல்

பரிசுப் பொட்டலம்
பிரிக்கப்படுவதுபோல்
பொழுது உதயமாகிறது
என் ஆவல்
உன் மீதா
இப்பொருள் மீதா
எங்கு படர்வதெனத்
திகைக்கிறது.


நார்சிசஸ்வனம் - 1996 தொகுப்பில் ஏகாந்த கீதத்திற்கான இசைக்குறிப்புகள் நீள் கவிதையிலுள்ள ஒரு துண்டு.

Read more...

Friday, May 10, 2024

பூர்வீகம் சொர்க்கம்

















Read more...

Wednesday, May 8, 2024

குட்டி வானமும் பெரிய வானமும்

தேனீர் நிறையுமளவு இடம் கொடுத்தபடி
வெளியேறி வந்து கொண்டிருந்தது
தேனீர்க் குவளையிலிருந்த வானம்
விளிம்பின்கீழ் சற்று இடம் விட்ட இடத்திலேயே
புது மகிழ்வின் புத்துணர்வோடு
அமர்ந்து கொண்டது
அவன் பருகச் சாய்த்தபோதெல்லாம்
ஒவ்வொரு மிடறு தேனீருடனும்
அந்தக் குட்டி வானமும்
பெரிய வானமும். . .

Read more...

Monday, May 6, 2024

மணக்கோலம்



















மணமகனை அணி செய்த மலர்மாலைக்கு
மணமகள் அணிந்திருந்த மாலையைப் பார்த்து
என்னவோ ஆகிவிட்டது!

அந்த மலர் மாலையின் பீடும் அழகும்
பெண்ணுக்கே உரியது
ஒத்துக்கொண்டுதானே ஆக வேண்டும்!
ஆணை அணை செய்த மாலையின்
தொங்கலும் தாழ்மையும்
காதல் கொண்டு பணிந்த
ஆணுக்கே உரியது

இந்த மணக்கோலத்துக்குத்தானே
இத்துணை கூட்டம்! கொண்டாட்டம்!

Read more...

Friday, May 3, 2024

எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்கும் ஆர்வம் மிக்க வாசகனுக்கு

 




















கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்


Read more...

Wednesday, May 1, 2024

இருந்த இடத்தில்

இருந்த இடத்தில்
இருந்தபடியே
இயங்கிக் கொண்டிருக்கும்
இந்தக் கட்டடங்கள் மரங்கள் சாலைகள்
இன்னும் என்னென்ன பொருட்கள் எல்லாம் . . .

எத்துணை அழகாக அமைதியாக
உறுதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன
மனிதனை அலைக்கழிக்கும்
மனம் என்பதே
அவர்களிடம் இல்லாததால்!

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP