Monday, April 29, 2024

பறத்தல்









பள்ளிவிட்டு வீடடைந்த சிறுவன்
பைக்கட்டை வீசி எறிவது போல்
தன் சிறகுகளை மேகங்களாய்
வானத்தில் எறிந்துவிட்டது பறவை

உடலை மலையாகவும்
கால்களை மரங்களாகவும்
மண்ணில் ஊன்றிவிட்டது

இதுவும் பறத்தல்தானே என்றது.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP