Sunday, July 31, 2011

முத்துச் சிப்பியின்...

தூய்மையில் புல்லிய சிறு மாசும்- அது தாளாத துயர்க் கனலும் பிறப்பித்தன ஒளிரும் ஒரு முத்தினை

Saturday, July 30, 2011

வைரம்

அன்றைய என் அவதானத்திற்குள் என் பிழைகள் என்னைத் தகித்துக்கொண்டிருக்கையில் நான் தெரிந்துகொண்டேன் ஒரு கல் வைரமாவதிலுள்ள ரசவாதத்தை

Friday, July 29, 2011

உரையாடல்

அது என்ன ஓசைகள் என் இனியவனே! என்ன செய்துகொண்டிருக்கிறாய் நீ? எப்படி இருக்கிறாய்? பேசத் தொடங்கும்போது- சிரிப்பும் கும்மாளமுமோ போரும் துயரோலமு...

Thursday, July 28, 2011

காய்கறிச் சந்தை

வாசல் விட்டிறங்கி இரண்டு எட்டு கிழக்கே நடந்தால் காய்கறிச் சந்தை! அவ்வளவு பக்கம்! நாம் எதற்கு வாசல்தோறும் வந்து கூவும் கூடைக்காரிகளைச் சார்ந்...

Wednesday, July 27, 2011

காடு

தனியாகச் செல்லும் மனிதனைப் பிடித்துக்கொண்டு கானகம் அச்சுறுத்தத் தொடங்குகிறது அடர்ந்த புதர் ஓரக் கொடிகள் ஆடைபிடித்து இழுக்கின்றன ஓயாது ஒலிக்க...

Tuesday, July 26, 2011

முள்ளை முள்ளால்...

குத்தி நுழைந்து முறிந்து குருதி மாந்தியபடியே கிடந்து அழுந்தி புண்ணும் சீழும் வாதையுமாய்த் துயர் தரும் முள்ளும், அம் முள்ளைக் குத்திக் கிளர்த...

Monday, July 25, 2011

உண்டியல் குலுக்குகையில்

உன் இரத்தத்தில் ஒலிக்கவில்லையா ”தர்மம் போடுங்க சாமீ!” என்றபடி பிட்சா பாத்திரத்துடன் ஒரு பரதேசி வீடு வீடாய் ஏறி இறங்கும் காட்சி? அதைத்தானோ ”ந...

Sunday, July 24, 2011

விதையும் கனியுமான பாரம்

அந்தோ! அன்று அச்சிறு செடி வழிவிலங்கொன்றின் கால்மிதிபட்டோ காட்சியளித்தது அப்படி? பதறி அதனருகே சென்று குனிந்து அதைத் தொட்டு நிமிர்த்தியபோது கண...

Saturday, July 23, 2011

புத்த பூர்ணிமா

நிலவடிக்கையிலும் நிழலை வீசுகின்றன ஏன் இம்மரங்கள்? இத் தண்ணொளியும் அமைதியும் கனவுமில்லை நனவுமில்லையெனில் வேறென்ன? கருத்துநிலைகளுக்கெட்டாத பேர...

Friday, July 22, 2011

பிச்சு

என் நேசத்திற்குரிய வீட்டிற்கு ஒரு வருகை அளிக்கவே விரும்பினேன் அங்கே, துள்ளி மணம் வீசிக்கொண்டிருக்கும் குழந்தை மலர்களுக்கு கொஞ்சம் இனிப்புகளோ...

Thursday, July 21, 2011

மரக்கிளையில்

மரக்கிளையில் துயிலும் மனிதனைப் போலின்றி எல்லாப் பிடிகளையும் விட்டுவிட்டு முழுமையாய் என்னை ஒப்படைத்தபடி துயிலுக்குள் நுழைகிறேன். அதனை அங்கே ச...

Wednesday, July 20, 2011

மேன்மையான ஓர் இதயம்

மேன்மையான ஓர் இதயம் அதுதான் துயரத்திற்குக் காரணமா? துயருறுவதும் அதன் தகுதிக்கு ஏற்றதுதானா? இல்லை, அதன் தகுதிதான் அத்துயரோ? மிக எளிதில் துன்ப...

Tuesday, July 19, 2011

ஆவலோடுதான்

ஆவலோடுதான் தபால்காரரை நெருங்குகிறான். தபால்கள் பெற்று வாசித்து முடிக்கும் போதெல்லாம் தவறாமல் எரியும் ஓர் உணர்வு ஏமாற்றம் என்பது இல்லை எனில்....

Monday, July 18, 2011

புதிய பாதையில்

புதிய பாதையில் முதலடி வைத்தவள் கால காலங்களாய்த் தன் பாதங்கள் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள். எத்தனை தவறான பாதையில் எத்தனை காலங...

Sunday, July 17, 2011

துயர்மிகுதியால்

துயர்மிகுதியால் விழிப்பு தகித்துக்கொண்டிருக்கும் இந்த இரவில் நான் உன்னை நினைத்துக்கொள்வது- ஓ, கிறிஸ்துவே, எனது அன்பனே! என்னையும சிறிதளவு தனி...

Saturday, July 16, 2011

எவ்வளவு காலமாய்

எவ்வளவு காலமாய் அவள் அவனிடம் இப்படியே வாழ்ந்து கொண்டிருப்பது? தப்பிக்கும் வழி துழாவிக்கொண்டேயிருக்கும் அவள் விழிகளைத்தான் அவன் கண்டுவிட்டானோ...

Friday, July 15, 2011

வேண்டாம் காதல

வேண்டாம் காதல, காதலின் சின்னமாய் நீ தரும் வைரமோதிரம்! அது நம் பிரிவைச் சுட்டுகிறது ஆகவே அது ஒரு பொய் அதன் ஒளியில் மறைகிறது அதன் பொருண்மை என்...

Thursday, July 14, 2011

தோல்விகளால்

(தோல்விகளாற் சற்றும் துவழாது காலங் காலமாய்க் கவிகளும் புத்தர்களும் தோன்றிச் தோன்றிச் சுட்டிக் கொண்டேயிருந்தும்) கூடிவரவில்லையே இன்னும் சொல்ல...

Wednesday, July 13, 2011

திடீரென்று

திடீரென்று அவள் வீடே ஓர் அறையாகத் தோன்றியது, வெகுகாலம் அறைவாசியாய் வாழ்ந்துவந்த பழக்கத்தினாலா? தீரத் தீரத் தன்னுள் மூழ்கி உண்மையினைத் தீண்டி...

Tuesday, July 12, 2011

வியர்த்தமாகிக் கரைகின்றன

வியர்த்தமாகிக் கரைகின்றன வெளியெங்கும் யாரோ அழுதழுது புலம்பும் பிரார்தனைகள் பட்டம் விடும் சிறுவனைப்போல் யாரோ இந்த அகால வேளையில் விண்ணை அளாவிக...

Monday, July 11, 2011

வாழ்வின் பெரும் பகுதியும்

வாழ்வின் பெரும் பகுதியும் பொருளீட்டுவதிலும் கேளிக்கைகளிலுமே கழிந்துவிட, எஞ்சிய சொற்பப் பொழுதுகளின் குழந்தைத்தனமான சந்தோஷங்களினின்றும் யாரோ அ...

Sunday, July 10, 2011

விடுதலையானாற் போல்

விடுதலையானாற் போல் சிறகடித்தாள் விதவையான பிறகும் மல்லிகா எழுதுவது அதிகமானது மட்டுமின்றி கருத்தரங்குகளிலும் மனிதரிடையே ஜொலித்தாள் ஆண்கள் ஜொலி...

Saturday, July 9, 2011

தோழி

அவளோடு அவளாகி அவன் முகம் பார்க்கவா, அவளைப் பார்க்கையில் சுடரும் அவன் முகம் பார்க்கவா, அவளை முன்தள்ளிப் பின்னிற்கும் பக்கத்துணையாகவா, அவள்முக...

Friday, July 8, 2011

மஞ்சள் காட்டிடையே

உலகத் துயர் களைய தன் ராஜ்யம் துறந்து மணிமேகலையையும் அமுதசுரபியையும் உலகுக்களித்தான், தெய்வீகமும் நான் எனும் பிரக்ஞைத் துயர்வலியும் அடிபட்ட ப...

Thursday, July 7, 2011

உழக்குக்குள்

உழக்குக்குள் கிழக்கு மேற்காய் என்னென்ன பேதங்கள், பிரிவினைகள்? எல்லையற்ற பெருவெளியில் கிழக்குமில்லை மேற்குமில்லை.

Wednesday, July 6, 2011

உள்ளதெதையுமே

உள்ளதெதையுமே உணரவியலாத அசமந்தம். கானகத்தின் எழிலுக்குச் சற்றும் இசைவிலாத விபரீதம் போல் கோவில்நோக்கி ஊடறுத்துச் செல்லும் அக் கானகப் பாதையில் ...

Tuesday, July 5, 2011

நீர்நிலைகளும் நிழல்தருக்களும்

நீர் நீந்தும் மீன்கள் போலும் அன்பில்மாத்ரமே திளைத்துக் கிடக்கும் ஆருயிர்களே இல்லையோ? கறைபடாத தூய்மையுடன் சேறு கடக்கும் மெல்லிய கால்களும் சிற...

Monday, July 4, 2011

குருதி நிறமான ஏரி

அந்திச் சூரியனின் இரத்தச் சிவப்பில் ஏரியெங்கும் கனன்ற மனத் தளர்ச்சியின் சொல்லொணாத் துயர். காணும் பொருள்கள் யாவுமே வாயும் வார்த்தைகளுமற்றதுகள...

Sunday, July 3, 2011

கவிதை எழுதுவது மிகமிக எளிது

நம்மைப் பிணித்திருக்கும் அனைத்தையும் துறந்து தன்னந்தனியாய் நிற்பதுபோல; எவரையும் பின்பற்றாமல் தனக்கான வாழ்வைத் தானே கண்டடைந்து தொடர்வதுபோல; க...

Saturday, July 2, 2011

சித்தார்த்த வீதி

ஒவ்வொரு வைகறையிலும் வாசற் பையில் வந்து கிடக்கிறது ஒளிவீசும் பரிசுப் பொருள். வியர்வையும் இரத்தமும் கண்ணீருமாலான கடின உறை சுற்றி காதலால் நெகிழ...

Friday, July 1, 2011

தன் உயிர்க்கே ஆதாரம்போல்

தன் உயிர்க்கே ஆதாரம்போல் எதையாவது பற்றிக் கொண்டிருக்காத மனிதனே இல்லையோ இப் பூமியில்? தனது ஊன்றுகோல்களே கொலைக் கருவிகளாய் மாறும் இரசவாதம் அறி...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP