இந்தப் பாடல்கள் எல்லாமே…
மலை உச்சியிலே
வேறு வேறு மதங்கள் கொண்ட
வேறு வேறு கோயில்களின்
வேறு வேறு துதிப்பாடல்கள்!
இந்தப் பாடல்கள் எல்லாமே
மலை கண்டுகொண்ட
மவுனத்திலிருந்து வந்ததென்றால்
இந்தப் போரும் குழப்பங்களும் இவ்வுலகில்
இருக்குமா மக்களே?