Friday, October 10, 2025
கவிதையின் மதம் உலாவும்…
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியமாய்
முழுநிலாதான் பூக்காதிருக்குமோ
சிரசிலிருந்து எழுந்தே
சிரசைத் தின்றுவிட்ட
விரிந்த கருங்கூந்தல்
அடர்ந்த கார்மேக விசும்பாகிவிடும்போது?
Thursday, October 9, 2025
சந்திப்பு
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
Wednesday, October 8, 2025
காணப்படுவதில் காணப்படுவது
நீர் கசியும் கண்களில் காணப்படுவது
தூயவெண் தடாகத்தில் பூத்து மிதக்கும்
கருப்பு அல்லி அல்லவா?
Tuesday, October 7, 2025
புதிய ஏற்பாடு - நீள் கவிதை
இந்நீள் கவிதையின் இறுதிப் பகுதியின் கவிதை வாசிப்பு இங்கு பகிரப்பட்டுள்ளது.
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
Monday, October 6, 2025
இந்த மலர்கள்
பசுங்கிளைகளில் இருந்ததைவிட
ஈர மண்ணில் உதிர்ந்து கிடந்ததைவிட
ஒரு பூஜாடித் தண்ணீரோடிருந்ததைவிட
அவன் இதயப் புனலிலல்லவா
நெடுங்காலம் வாழ்கின்றன
இந்த மலர்கள்?
Saturday, October 4, 2025
அதீனா அபூ உபைதாவின் நிசப்த வியாக்கியானம் – நூல் வாழ்த்துரை
தேவதேவன் வாசகரும், இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் முதுகலை பயிலும் மாணவியும் தனது முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கும் இளங்கவியுமான அதீனா அபூ உபைதாவின் நிசப்த வியாக்கியானம் என்ற நூலுக்கு எழுதிய வாழ்த்துரை.
முழுக்கட்டுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Friday, October 3, 2025
எப்போதும் சொல்லிக்கொண்டேயிருப்பது
தனியாயிருக்கும்போதும்
நிரம்பியிருக்கும்போதும்
காலியாயிருக்கும்போதும்
எப்போதுமே
கோப்பை சொல்லிக்கொண்டேயிருப்பது
தன்னுள்ளிருக்கும்
பொன்இன்மையையே அல்லவா?
Thursday, October 2, 2025
தேவதேவனின் கவிதை நூல்கள்(1 - 16 மற்றும் 37 - 56) கிடைக்கும் விவரங்கள்
முதல் 16 நூல்கள்: (குளித்துக் கரையேறாத கோபியர்கள் முதல் பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் வரை) - இரண்டு பெருந்தொகுப்புகளாக,
வம்சி புக்ஸ்,
19, டி. எம். சாரோன்,
திருவண்ணாமலை - 606601
கைபேசி எண்: 94458 70995
எஸ். சூரஜ்சிங்,
6, கவ்ஷிக் அவென்யூ,
2ம் தெரு, ராஜாகீழ்ப்பாக்கம்,
சென்னை - 600073
கைபேசி எண்: 79044 30734
****************** *********************** ******************** **************** **************** ****************
37லிருந்து 56 வரையான 20 நூல்கள்: (தன்னியல்பின் தாரகை முதல் நீதியின் மேல் பசிதாகம் உள்ளவர்கள் வரை)
தன்னறம் நூல்வெளி,
கைபேசி எண்: 98438 70059
தேவதேவனின் கவிதை நூல்களின் முழுப் பட்டியலும் இங்கே
Read more...
Wednesday, October 1, 2025
ஹைக்கூ
கவனி இயற்கையை!
என்றது ஹைக்கூ
பிறகு
கவனி சொற்களானாலும்
என்றது
அதன் பிறகு
எதையானாலும்
கவனி என்றது ஹைக்கூ
கடைசியில்தான் அதற்கே தெரிந்தது
கவனி என்பதுதான்
தான் சொல்ல விரும்பிய
மெய்ச் செயல் என்பதும்
பின்தொடர முடியாததும்
பற்றிக்கொள்ள வேண்டியதுமான
பேராசான் என்பது!
கைபேசி புகைப்படச்
சவுகரியம் கண்டவுடனேதான்
ஒரு காட்சி ஒன்றுதான்
தான் என்ற பொய்மையை
வெட்கத்துடன் அது துறந்துவிட்டதும்!

