அறிந்தவனோ?
உதிராத பசிய இலைகளுக்கிடையே
உதிர்ந்தும் உதிராது சிக்கிக் கிடந்த
பொன்இலை ஒன்றைக் கையிலெடுத்துப்
பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.
அதை எங்கே விடுவதென்று அறிந்தவனோ?
அறிய முடியாமையின் உலகிலிருந்து வந்து
அறிந்தவற்றால் துயருற்று
துயர்களைய வந்தவனாய்
இந்தக் காற்றுவெளியிடையே நின்று
க-விதை தூவிக் கொண்டிருப்பவனோ?