ஆமாம், மனிதனுக்கு மரணமில்லை!
முழுநிறையுடன் வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள்
மரிப்பதில்லை,
முழுநிறையை இந்த உலகம்
அடையாததால்!
மரணத்தை அறிந்தவர்களாததால்
அவர்களுக்கு
துயரமும் அத்தோடிணைந்த
இன்பமும் கிடையாது. வெகுமதியாக
இயற்கையின் ஒத்திசைவுதரும்
முடிவிலாப் பேரின்பமும்
பெருநிறைவும் உண்டு.
முழுநிறைவில்லா அரைகுறை மனிதர்களும்
மரிப்பதில்லை
மரணத்தை அறியாத மூடர்களாதலால்
இன்பத்துடனும் துன்பத்துடனும்
முடிவிலாப் போர்களையும் துயர்களையும்
படைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்!