Friday, May 8, 2026

ஆயிரம் மண்துகள்களுக்கு நடுவே...

துவாரமுள்ள ஒரு‌ மூக்குமடலில்
சொருகுவதற்கான ஊசியுடன்,
கட்புலனாகா
பொன்னில் பொதிந்த
புள்ளி வைரக்கல்லாய்,
ஆயிரம் மண்துகள்களுக்கு நடுவே
வழியில் அவன் கண்களைப் பறித்துவிட்ட
ஒரு மூக்குத்தி!
ஒவ்வொரு மண்துகள்களையும்
ஒளிரவைக்கப் பார்க்கும் பேரொளி!

எப்போதும் அவன் உயிரை
வாட்டி வதைத்துக் கொண்டிருந்த
பெருவெள்ளத் துளியும்
விலைமதிக்க முடியாததும்
ஆசைகளாலன்றி
பேராற்றற் பெருங்கடலில் விளைந்த
முத்துச் சன்னம்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP