S
எஸ் கொக்கி நான்,
எவ்வளவு அழகாயிருக்கிறேன் நான்!
மேலே மாட்டிக்கொண்டு
கீழிறங்குவதுபோல்
தோன்றி
மேலேறிக் கொண்டேனல்லவா,
என்னைக் காணும் எவரும்
மேலேறிக் கொள்ளும்படியாய்!
-புரியாது கழிந்த பொய் நாட்களெல்லாம்(2018) கவிதைத் தொகுப்பிலிருந்து
எவ்வளவு அழகாயிருக்கிறேன் நான்!
மேலே மாட்டிக்கொண்டு
கீழிறங்குவதுபோல்
தோன்றி
மேலேறிக் கொண்டேனல்லவா,
என்னைக் காணும் எவரும்
மேலேறிக் கொள்ளும்படியாய்!
-புரியாது கழிந்த பொய் நாட்களெல்லாம்(2018) கவிதைத் தொகுப்பிலிருந்து