கேள்விகள்
அன்புடையவர்களாய் நாமிருந்தால்
அன்பைத் தேடி, புகழைத் தேடி
அலைவோமா நாம்?
நிறைவுடையோராய் நாமிருந்தால்
செல்வத்தைத் தேடி, செல்வாக்கைத் தேடி
அலைவோமா நாம்?
தன்மய்யம் கொண்டோராய்
புன்மையப் பாதைகளிலெல்லாம்
அலைவோமா நாம்?
எல்லோரும் கவிஞர்களாகாதவரை
நமக்கு விடுதலை இல்லை என்பவன் எப்படி
போட்டி, பொறாமை, பேராசை, மேலாண்மை
பயம் கொண்ட உலகில் அலைவான்?