கோயில் நகர்
நகர் நுழை வாயிலிலிருந்தது
கொட்டை எழுத்தில்
கோயில்நகர் என்ற அறிவிப்புப் பலகை!
சடாரென்று ‘கோயில்நகர்’ என்று
கூச்சலிட்டார் சுநேகா,
நகரமே திரும்பிப் பார்க்கும்படி!
ரொம்ப நன்றி என்றது பலகை
உன்னைப்போல
களங்கமின்மையும், களிப்பும்
எழுச்சியுமிக்க மனிதர்களை
இப்போதெல்லாம் எங்கே பார்க்கமுடிகிறது?
ரொம்ப மகிழ்ச்சியம்மா
உன்னைக் கண்டதிலும் வரவேற்பதிலும்
என் வாழ்வே நிறைவடைந்துவிட்டதுபோல் தோன்றுகிறது!
கோயில் இருந்தென்ன
பக்தி இருந்தென்ன
பழம்பெருமைகள் இருந்தென்ன
வாழ்வை மனிதன் இழந்துவிட்டால்
என்ன இருந்து என்ன பயன்?