நமது அறவுணர்வை மீட்டுக்கொண்டோமா?
நம் அறவுணர்வை மீட்டுக்கொள்ள
நமது கணக்கறிவும் அறிவியல் தொழில்நுட்பமும்
போதாதா என்ன?
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்
பிறக்கப் பிறக்க ஒவ்வோரு குழந்தைக்கும்தான் -
ஒரு எண் இட்டு அவர்களை ஒரு தாய் போல்
பேணிக்கொள்ள முடியாதா,
அவர்கள் சாகும்வரை?
இந்த எண்ணைப் பாருங்கள்
எந்த எண்களையும் பாருங்கள்
ஒரு எண்ணோடு ஒரு எண் நெருங்கி
செயல்வளர்ச்சி நோக்கில் போகும் நோக்கமன்றி
இணக்கமற்ற உணர்ச்சிகள் ஏதாவது கொண்டிருக்கிறதா
பாருங்கள்!
333333 – இந்த எண்கள்தாம் ஒற்றுமையாய்
இருக்கின்றனவா?
3685907214 – இந்த எண்கள்?
எந்த எண்களானாலுமே
எப்படி இணங்கி வாழ்கின்றன, பாருங்கள்