சிலுவையில் அறையப்பட்ட இயேசு
இடிந்துவிடாமல்
வானத்தைத் தாங்கிக் கொண்டன
விரிந்த கைகள்
கால்கள் மண்ணில்
அழுத்தமாக ஊன்றிக் கொண்டன
“எல்லோரும் இன்புற்றிருக்கும்
உலகைக் கண்டடையும் வரை
இங்கிருந்து என்னால்
இறங்க முடியாது, அன்பா!”
கண்களும் காதுகளும் உள்ளோர்க்கெல்லாம்
அவர் குரல் கேட்கத்தானே செய்யும்?