ஓர் உலகம், ஓர் வீடு...
ஓர் உலகம் ஓர் வீடு என்றாகிவிட்ட
மலை உயர அடுக்கக மாளிகையின்
ஒரு லிஃப்ட் அறையில்
இதற்கு முன்பு
நாடு மொழி இனம் சாதி கடந்த
அந்நியர்கள்
இவ்வளவு நெருக்கமாக
நின்றுகொண்டிருப்பதைப்
பார்த்திருக்க மாட்டீர்கள்!
எந்த ஒரு இரகசியச் செயல்பாடாக
இவையெல்லாம் நடக்கின்றன என்பதையும்
உணர்ந்திருக்க மாட்டீர்கள்?