எனது வீட்டுத்தோட்டம்
உலகின் பதற்றநிலையிலிருந்து
வெகுதூரம் இல்லை எனது வீடு
வீட்டின் ஜன்னலை உரசிக்கொண்டுதான்
நிற்கிறது எனது தோட்டம் எனினும்
உலகைவிட்டு, இந்த வீட்டைவிட்டு
வெகுதூரம் தள்ளியிருக்கிறது எனது தோட்டம்
நான் விழிப்பதற்கு முன்
என் கனவில் தென்பட்டது:
காடோ? தரிசோ?
விழித்தவுடன் என் கண்ணில்படுவது:
எனது தோட்டமே
எனது புத்துணர்வின் ரகசியம் அது.
அங்கே நேற்று என்பதே காணப்படாது
(ஒரு ரசாயன மாற்றம் பெற்று
மறைந்துகிடக்கும் சக்தியாக மட்டுமே
அது இருக்கலாம்)
மூங்கில்களைத் துளையிடும் வண்டுகளைப் போலவும்
தன் சிறகுகளால் இரும்பு விலங்குகளை
உடைத்துவிடக்கூடிய வண்ணத்துப் பூச்சிகளைப் போலவும்
இன்று மட்டுமே உலாவுகிறது இங்கே
இல்லை;
காய், கனி, பிஞ்சு, பூ, கனியுள் விதை என்று
எக்காலமும்
இன்றாக மட்டுமே இருக்கிறது இங்கே
கடிகாரங்களைப் பார்த்து அன்று
பூமியின் பருவகாலங்களைக் கேட்டு
அவை நடக்கின்றன,
ஒரு துறவியின் உள்ளத்தைப் போல,
துறவிக்கும் என் தோட்டத்திற்கும் வீடு
கிடையாது என்று எண்ணியிருந்தேன்; அது தவறு,
தோட்டக்காரனின் பராமரிப்பே
தோட்டத்தின் வீடு
தோட்டப் பராமரிப்பில் இருக்கும் ஒருவனிடம்
ஒரு மதவாதிக்கோ தத்துவவாதிக்கோ
தீர்க்கதரிசிக்கோகூட சொல்வதற்கு ஏதுமில்லை
எனது புத்துணர்வின் ரகசியம் அது.
அங்கே நேற்று என்பதே காணப்படாது
(ஒரு ரசாயன மாற்றம் பெற்று
மறைந்துகிடக்கும் சக்தியாக மட்டுமே
அது இருக்கலாம்)
மூங்கில்களைத் துளையிடும் வண்டுகளைப் போலவும்
தன் சிறகுகளால் இரும்பு விலங்குகளை
உடைத்துவிடக்கூடிய வண்ணத்துப் பூச்சிகளைப் போலவும்
இன்று மட்டுமே உலாவுகிறது இங்கே
இல்லை;
காய், கனி, பிஞ்சு, பூ, கனியுள் விதை என்று
எக்காலமும்
இன்றாக மட்டுமே இருக்கிறது இங்கே
கடிகாரங்களைப் பார்த்து அன்று
பூமியின் பருவகாலங்களைக் கேட்டு
அவை நடக்கின்றன,
ஒரு துறவியின் உள்ளத்தைப் போல,
துறவிக்கும் என் தோட்டத்திற்கும் வீடு
கிடையாது என்று எண்ணியிருந்தேன்; அது தவறு,
தோட்டக்காரனின் பராமரிப்பே
தோட்டத்தின் வீடு
தோட்டப் பராமரிப்பில் இருக்கும் ஒருவனிடம்
ஒரு மதவாதிக்கோ தத்துவவாதிக்கோ
தீர்க்கதரிசிக்கோகூட சொல்வதற்கு ஏதுமில்லை
- நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம் (1991) கவிதைத் தொகுப்பிலிருந்து.