ஹைக்கூ
கவனி இயற்கையை!
என்றது ஹைக்கூ
பிறகு
கவனி சொற்களானாலும்
என்றது
அதன் பிறகு
எதையானாலும்
கவனி என்றது ஹைக்கூ
கடைசியில்தான் அதற்கே தெரிந்தது
கவனி என்பதுதான்
தான் சொல்ல விரும்பிய
மெய்ச் செயல் என்பதும்
பின்தொடர முடியாததும்
பற்றிக்கொள்ள வேண்டியதுமான
பேராசான் என்பது!
கைபேசி புகைப்படச்
சவுகரியம் கண்டவுடனேதான்
ஒரு காட்சி ஒன்றுதான்
தான் என்ற பொய்மையை
வெட்கத்துடன் அது துறந்துவிட்டதும்!