லோகமாதேவி
முதன் முதலாக  
தன் பெயரைப் பற்றி
அவர் தன் அன்னையிடம் கேட்டார்
அன்னை அதன் பொருளை 
உரைத்த அந்த நாளிலிருந்து 
எல்லாம் மறைந்து 
ஒரு பெரும் பொறுப்பு மட்டுமே 
அவருடையதாய் ஆனது.
அது செயல்படுகையிலெல்லாம்
அவருடையது என்பதும் மறைந்து போனது.