ஒரு சிறுவன்
ஒரு சிறுவன் கிடுகிடுவென 
என்னமாய் ஓட்டிச் செல்கிறான்! 
 
ஒரு சிறு சக்கரம் 
அதன் மய்யப்புள்ளியைத்தான் 
மனிதன் தன் பாதங்களால் 
இயக்கவேண்டும் என்பதை 
கண்டுகொண்டவனும் 
கடைப்பிடிப்பவனும் 
காட்டிக்கொண்டு செல்பவனுமாய் 
ஒரு சிறுவன்! 
 
எத்துணை பெரிய மேதை! 
அற்புத மனிதன்! 
ஞானி! 
 
அய்யஅ ஒரு மிதிவண்டி… 
என்பவன்தான் 
எத்துணை பெரிய அஞ்ஞானி 
மடையன்! 
எதைக் கொடுத்தாலும் 
எவ்வளவு கொடுத்தாலும்  
கண்டுகொண்டு 
பற்றிக் கொள்ளத் தெரியா மடையன்!