பெண்ணை விரும்பும்…
பெண்ணை விரும்பும்
ஆணின் இளமையோ அது?
சிலுவையணிந்து
வெள்ளுடைதரித்த
கன்னிகாஸ்திரிகளல்லவா
அவனைக் கவர்ந்தார்கள்?
காண்பதை மட்டுமே விழிகளால்
வலியுறுத்துமாப் போல் ஒளிர்ந்த
ஹிஜாப் பெண்களல்லவா
அவனைக் கவர்ந்தார்கள்?
சின்னஞ் சிறு வயசிலேயே
ஆண்டாள் அல்லவா
அவனை ஆட்கொண்ட தேவதை?