Thursday, June 30, 2011

பாட்டியின் தனிமை

கதைசொல்லித் தூங்கவைத்த என் பாட்டியை ஓர் காலையில் தேடி நடந்தேன். எவரும் கடந்து செல்லமுடியாத ஒரு காட்சியாகவன்றோ கண்டேன் அங்கே என் பாட்டியை! வல...

Wednesday, June 29, 2011

நாய் கவனம்

எனது துப்புரவுப் பணியாளரே! கொலை வெறிபோலும் வெறுப்பையும் கோபத்தையும் தன்னை நோக்கிக் குரைத்த நாயின்மேல் காலியான குப்பைக் கூடையால் அதன் சிரசில்...

Tuesday, June 28, 2011

பிள்ளை இன்பப் பேருவகையுடன்

பிள்ளை இன்பப் பேருவகையுடன் சூரிய ஒளி வந்து அமர்ந்திருக்கும் மரகதப் பொன் இலைகள். மதிற்சுவர்மேல் ஓடித்திரியும் அணில். கிளை துள்ளிக் களிக்கும் ...

Monday, June 27, 2011

துயில்

கண்டு கொள்ளும்போது முகிழ்க்கும் மெல்லிய இதழ் விரிவில்லை? காணாதபோது துலங்கும் மவுனமும் இல்லை? தேடாத போது ஒளிரும் அமைதியுமில்லை. உறும் கவனநெரு...

Sunday, June 26, 2011

அலங்கோலமான

அலங்கோலமான இல்லம். அழகும் ஒழுங்குமற்றே எரிகிறது இவ்வுலகம் என்பதை உய்த்துணரவியலாத அசமந்தம். பகுத்தறிதலில்லாது விடுதலை இல்லை காணற்கரிதானதே என்...

Saturday, June 25, 2011

திருப்பரப்பு

தொடர்வண்டி ஒன்றில் ஒரு நீண்ட இரவு கடந்து பாரமும் களைப்புமாய்  இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம் முழுசாய் எங்களுக்கே எங்களுக்கென வந்ததொரு...

சுட்டுவிரல்

அது பிறந்ததுமில்லை இறக்கப் போவதுமில்லை. வளர்ச்சி, வளர்ச்சிப் படிநிலைகள் என்றேதுமில்லை அதனிடம். அளவிடமுடியாத எடைபொருந்திய அதன் மவுனம், அவன் க...

Friday, June 24, 2011

அமைதி என்பது...

உத்தேசமில்லாமலேயே அனைத்துச் சச்சரவுகளுக்கும் தீவினைகளுக்கும் எதிராய் எரியும் உக்கிரமான போரோ? பயனிலா வெளிப்பாடுகளனைத்தையும் இடையறாது களைந்தபட...

Thursday, June 23, 2011

காட்டையழித்து

காட்டையழித்து ஒரு கரும்புத் தோட்டம். ஆயிரங்கால் மண்டபத்தையழித்து ஒரு அருங்காட்சியகம். பெண்ணை அழித்து ஒரு மனைவி, மகள், மருமகள். மனிதனை அழித்த...

Wednesday, June 22, 2011

மலர்களில் மலர்ந்துள்ளது எது?

மலர்களில் மலர்ந்துள்ளதும் நின் அகன்ற விழிகளில் துயிலின்றி விழித்திருப்பதும் நின் இதழ்களில் கனிந்து மவுனமாய்ப் பேசிக்கொண்டிருப்பதும் சலனமின்ற...

Tuesday, June 21, 2011

பெருங்குளம்

துடிக்கும் அலைகளுடன் வானம் பார்க்க விரிந்து பூமி செழிக்க்க் கிடக்கும் நீயே உனது ஆனந்தம். கண்களிற் பட விழைந்த காட்டுப் பூக்கள் கோடியின் காதல்...

Monday, June 20, 2011

சின்னஞ்சிறு குருவியே

எத்துணை கொடுத்து வைத்தவள் நீ! மானுடப் பரப்பில் உன் மூளை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. அமைதி அமைதியின்மை அறியாத பேரமைதியின் புதல்வி நீ. எளிய தே...

Sunday, June 19, 2011

அந்தி

நீரால் அமைந்த இவ்வுலகில் வானிற் கதிரவனாய் ஒளிர்வதும் மண்ணிற் தாமரைகளாய் மலர்வதும் ஒன்றேயெனும் பேருணர்வின் நாடகமோ இவ்வாழ்க்கை? இரு பேருணர்வுக...

Saturday, June 18, 2011

இரத்தினங்கள்

கணமும் விண்ணைப் பிரிந்திராத காதலால் பெருநிறைவும் பேரழுகுமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது பூமி. சாலைவழிச் செல்லும் சக்கரங்களின் புழுதி தீண்டாத தூ...

Friday, June 17, 2011

நாய்ச் சிற்பம்

வளர்ப்பு மிருகங்கள் வளர்ப்பதில் பிரியமில்லாதவனாய் இருந்தவன், என் சின்னமகனின் பிடிவாதமான கட்டளையால் மாட்டிக் கொண்டேன், ஒரு செல்ல நாய்க்குட்டி...

Thursday, June 16, 2011

மணமக்கள்

நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு திருமண மண்டபம். மய்யமாய் மலர்மாலை சூடிநிற்கும் தன்னந்தனியான ஒரு திருமண ஜோடி. ஆனால், தனிமை என்பது ஆங்கில்லை. பாட்ட...

Wednesday, June 15, 2011

கவிதை

நீர் நடுவே தன்னை அழித்துக் கொண்டு சுட்டும் விரல்போல் நிற்கும் ஒரு பட்ட மரம். புரிந்துணர்வின் பொன்முத்தமாய் அதில் வந்து அமர்ந்திருக்கும் ஒரு ...

Tuesday, June 14, 2011

விண்ணளவு பூமி

விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலம் நடுவே செவியின் இரு கேள்எல்லைகளையும் தாண்டிக் கேட்டதொருபேரோசை. கண்ணின் இரு பார்வை எல்லைகளையும் தாண்டிக்...

Monday, June 13, 2011

பாதையோரத்து மலர்கள்

யார் வலியவனும் மனிதனுமானவன்? தன் ஏழை எளிய சுற்றத்தைத் தன் தோள்மேல் சுமந்து செல்பவனா? செல்வம் திரட்டிப் போகிற போக்கில் தீனர் திக்கற்றவர்களின்...

Sunday, June 12, 2011

மரம்

உனது பாடுகளையோ ஆறாத ரணங்களையோ அவ்வப்போது இலைகள் திறந்து காட்டுகிறாய்? தாங்கொணாத வேதனையானதெப்படி நமது வாழ்வு? இக் கடுங் கோடையில் தளிர்த்துப்...

Saturday, June 11, 2011

மலர்கள்

நம் பார்வைக்கே ஏங்கி நிற்கின்றன தொட்டால் வாடிவிடும் மலர்கள். வாடுமோ கல்லில் செதுக்கப்பட்ட மலர்; காதல் பரிமாறக் காதலாற் கொய்யப்பட்ட மலர்? மலர...

Friday, June 10, 2011

அதன் பின்

துன்பகரமான நினைவுகளினதும் வலிகளினதும் காரணங்களைத் துருவியபடி இருள்வெளியில் காலம் காலமாய்ப் பறந்து கொண்டிருந்த ஒரு பறவை,அவனருகே தோளுரசும் ஒரு...

Thursday, June 9, 2011

வேசி

ஆகக் கழிசடையைக் குறிக்கவும் பெண்தானா அகப்பட்டாள் உங்களுக்கென என் மகள் சீறி ஆட்சேபிக்கவும் சொல்லிழந்த நிலையில் கண்டேன் அதுவரையிலும் நான் காணா...

Wednesday, June 8, 2011

இராஜ்ய பாரம்

மைதாஸ் நீ தொடுவதற்குமுன் எல்லாம் பொன்னாகத்தானே இருக்கின்றன, வேறு ஒரு வரம் கேள். பேசத் தோன்றாமல் நின்றதனால் அவளாகவே உதவினாள்; நீ தொடுவதெதுவும...

Tuesday, June 7, 2011

ஒரு மலர்

தன் மணம் இப் பிரபஞ்சவெளியின் முடிவின்மைவரை பரவிக் கொண்டிருக்கிறதாய் முற்றுமுழு உறுதியுடன் முறுவலித்துக் கொண்டிருந்தது ஒரு மலர். தனக்குக் கிட...

Monday, June 6, 2011

அந்தி விளக்கொளியில்...

என் பணிகளையெல்லாம் முடித்து விட்டு ஒவ்வொரு நாளும் தவறாது எத்தனை வேகமாய் ஓடிவந்தமர்கிறேன் உன்னிடம்! எத்தனை பெருங்காதல் நம்மிடையே நிலவுகிற தென...

Sunday, June 5, 2011

கப்பன் பார்க், பெங்களுர்

ஒவ்வோர் கணமும் ஓரோர் திசை திரும்பிய வண்ணமாய் எக் காலத்தும் எத்திசையும் எல்லோரை நோக்கியும் நீண்ட நீண்ட கைகளேயான ஒரு பெருமரப் பிரமாண்டம் அந்தப...

Saturday, June 4, 2011

பருந்து

உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா, பருந்து ஒன்று கோழிக் குஞ்சொன்றை அடித்துச் சென்ற காட்சியை? அதன் கூர்மையான நக...

Friday, June 3, 2011

ஏதோ ஒரு திட்டத்தில்...

எங்கள் பயிற்சி வகுப்பின் நிகழ்ச்சி நிரலில் ஒன்றாய் வினாடி வினா நடத்தியவரின் முகத்தையே தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அதில் ஒளிரும் மேல...

Thursday, June 2, 2011

என் அணிற்பிள்ளைகள்

என் மரநிழல் குளிர்விக்கும் மதிற்சுவர்மேல் பருக்கைகள் வைத்துவிட்டு நகர்ந்தேன். விரைந்து வந்து உண்ணும் என் அணிற்பிள்ளைகளின் பட்டுடலெங்கும் கனல...

Wednesday, June 1, 2011

கவிதைவெளி

கவிதை எழுப்பித்தானே காலையில் நான் துயில் களைந்தேன் கவிதையின் நீரில் தானே முகம் கழுவினேன் கவிதையின் தூரிகை கொண்டல்லவா வீட்டினை நான் தூய்மையும...

Tuesday, May 31, 2011

காத்திருக்கும் இரவின்…

காத்திருக்கும் இரவின் கட்டிலில் சாய்ந்தவுடன்தான் எத்தனை நிம்மதி! இது போலுமொரு நிம்மதியுடன்தான் மரணமும் நிகழும் எனும் ஓர் ஆறுதல் குறிப்பும் அ...

Monday, May 30, 2011

நிலக் காட்சி

மிகப் பெரியதோர் இலட்சிய நன்மையே பிரம்மாண்டமான மெய்மையும் காதற் பெரும் இருப்பும் இப் பேரியற்கையின் எழிலுமாமோ? உரையாடல்களில் புகுந்து கண்களில்...

Sunday, May 29, 2011

காதலின்ப முழுமை

காதலின்ப முழுமை நிலவுமோடா, இப்புவியில், உன் காதலியிடம் உன் குற்றம் வருந்தி உன்னை நீ திருத்திக் கொள்ளாவிடில்?

Saturday, May 28, 2011

மண்ணும் மனிதர்களும்

மண்ணைவிட்டுப் பிரிய மனமில்லாதவர்களாய் நாம் வாழ்ந்த்தெப்போ? எளிய வீடுகளின் மத்தியிலே வளர்ந்து வளர்ந்து காவல் நாயும் இரும்புக் கதவும் ஓங்கு மத...

Friday, May 27, 2011

அந்த முகம்

லட்சுமி லட்சுமி என்று ஒரு சிறுமி இருந்தாள். அவள் தன் தம்பிப் பாப்பாவை பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை உரிய வயதில் பள்ளிக்கூடம் காணாது போக்கிற...

Thursday, May 26, 2011

புதிய பேருந்து நிலையம்

ஒளியும் காற்றும் வெள்ளமாய்ப் பொங்கிநிற்கும் பேருந்து நிலையம் வந்து நின்றார் புத்தர். வெளியினின்றும் வெளியினைப் பிரிக்கும் பக்கச் சுவர்களில்ல...

Wednesday, May 25, 2011

பிழை

ஒரு பெரும் பிழை நிகழ்ந்து விட்டது போலிருந்தது. மாபெரும் விழாக் கூட்டத்தின் மையமாய் கடவுள் சிலை. கூடியிருந்த மானுடரனைவரையும் நச்சி அவர் தம் ஆ...

Tuesday, May 24, 2011

கண்ணீரில் கரைந்துவிட்டன

கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கும் அக்காவிற்கு ஒரு கவிஞன் தான்பாலாயக்கு என்றாள் தங்கச்சிக்காரி. மழைக் காலக் கோலம்போல் கண்ணீரில் கரைந்துவிட்டன,...

Monday, May 23, 2011

நித்திய கல்யாணி

அது ஓய்வின்றி ஒழிவின்றி எப்போதும் தன்னைத் தன் மலர்களாலேயே அலங்கரித்துக்கொண்டு தன் ஒரே லட்சியத்தில் உறுதியாய் வாழ்ந்துகொண்டு காற்றில் நடனமிட்...

Sunday, May 22, 2011

பேசாத சொற்கள்

மாடிக்கூளங்களை காற்று பெருக்கிவிடும் கவலை கொள்வதற்கு இன்று அவசியமில்லை மரங்களின் அழுக்கினை மழை கழுவிவிடும் கவலை கொள்வதற்கு இன்று அவசியமில்லை...

Saturday, May 21, 2011

புலியின் தனிமை

[அ] மனிதரற்ற வீதியில் நடந்து வனத்துக்கு திரும்பியது ஒருமனிதனையும் காணாத பசி வேதனையால வாடிய புலி மீண்டும் பெருத்த தினவுடன் ஒரு நாள் ஒரு நகரத்...

Friday, May 20, 2011

ஒன்று

உணர்ச்சிப் பெருக்காய் விரிந்துகிடக்கும் சேலைகள்தாம் எத்தனை! நம் ஒற்றை உடன் நாடுவதோ ஒன்றே ஒன்று. எதை எடுத்துக்கொள்வதெனத் திகைத்து ஒவ்வொன்றின்...

Thursday, May 19, 2011

கொடுவனம்

தன்னந்தனியே ஒரு காட்டிடையே நிற்க நேர்ந்துவிட்டதா என்ன? நன்பகல் வேளையிலும் இரவின் ஒலியுடன் இருண்டு கிடப்பதேன் இவ்வுலகம்? உயிரைப் பிடித்துக்கொ...

Wednesday, May 18, 2011

சிறுவர் உலகம்

கல்லெறிபட்டும் (ஒரு சின்னக்கலசல் பதற்றம், வலி அவ்வளவே) கலங்காது தேனையே சொரிகிறது தேன்கூடு

Tuesday, May 17, 2011

தீராப் பெருந் துயர்களின்

முளை எட்டிப் பார்க்கும் விஷ வித்துக்களையா கண்டு கொண்டாள் சாந்தா வேகம் பொறி பரக்க விளையாட்டுத் திடல் அதிர ஒருவரை ஒருவர் முந்தி வந்து கொண்டிரு...

Monday, May 16, 2011

தாய்வீடு

பாதுகாப்பையே தேடுபவர்கள் பாதுகாப்பை அடைவதேயில்லை. பொருளையே தேடுபவர்கள் அன்பை அடைவதேயில்லை. இன்பத்தையே விழைபவர்கள் நிறைவை அடைவதேயில்லை. ராணுவ...

Sunday, May 15, 2011

கண்டதும் விண்டதும்

மலையுச்சியேறியவன் தான் கண்டு கொண்டதை ஒரு கோயிலென வடித்துவிட்டுக் கீழிறங்கினான். கோயில் சென்றவன் உதட்டு பிதுக்கலுடன் கைவிரித்தபடி கீழிறங்கினா...

Saturday, May 14, 2011

காவல் நிலையம்

விலங்கோடு விலங்காய்க் குடிகொண்டிருக்கும் வன்முறை எங்கிருந்து வந்ததென்று யாருக்காவது தெரியுமா? தெரியும். கையிலகப்பட்ட கைதிமீது காவலன் ஒருவனிட...

Friday, May 13, 2011

ஆற்றோரப் பாறைகளின்மேல்

ஆற்றோரப் பாறைகளின்மேல் அமர்ந்திருக்கும் இக் கல் மண்டபங்கள்தாம் எத்தனை அழகு! எத்தனை எளிமை! எத்தனை உறுதி! எத்தனை தூய்மை! பூஜை வேண்டாமல் விக்ரக...

Thursday, May 12, 2011

என் அறைச் சுவரை அலங்கரிக்கும் நிலக் காட்சி ஓவியம் ஒன்று...

அட, அற்பனே! யாருக்குச் சொந்தமானது அது? ஏழைகளுக்கு எட்டாத சற்று விலையுயர்ந்த அந்த ஓவியத்தை வாங்கி மேடைபோட்டு முழங்கி வழங்கி தன் மேலாண்மையை நி...

Wednesday, May 11, 2011

ஓடும் இரயில் வேகம் தொற்றி

ஓடும் இரயில் வேகம் தொற்றி அதிர்ந்தன சப்தநாடிகளும் அதன் வழியில் அவன் இனி குறுக்கிட முடியாது? புவி முழுமையையுமாய் அடக்கி நெரித்தபடி விரைந்து ந...

Tuesday, May 10, 2011

எனது கவிதை

ஆராய்வோர் யாருமற்று இயங்கும் ஓர் ஆய்வுக்கூடம் அது தான் ஆராயும் பொருள் யாது என்று அதற்குத் தெரியாது அது தன்னைத்தானே விளக்கிக் காட்டத் தொடங்கி...

Monday, May 9, 2011

வீடு பெறல்

மனைவியும் குழந்தைகளும் விருந்தாடச் சென்றிருந்தனர். அப்போது எனக்குத் தெரியாது அதில் உள்ள இரகசியம் விஷயத்தை அறிந்த வேலைக்காரியும் வராது ஒழிந்த...

Sunday, May 8, 2011

சில அரசியல்வாதிகளையும் ஒரு கவிஞனையும் பற்றிய குட்டிக்கதை

அவன் கவிதை எழுதக் குவிந்தபோது எல்லாம் சரியாகிவிட்டிருந்தது இத்துணை எளிமையாய் உண்மை இருப்பதை ஏற்க இயலாது வாய் அலறிக் கொண்டிருந்தது மலை. சில த...

Saturday, May 7, 2011

கட்டுச் சோறு

எவ்விதம் நான் மனச்சிக்கல் மிக்கவோர் மனிதனாய் மாறிப்போனேன்? எவ்விதம் என் மனச்சிக்கல் சேற்றினுள் பூக்கின்றன தாமரைகள்? அப்பொழுதையும் அவ்விடத்தை...

Friday, May 6, 2011

கனவுகள்

முலை பருகிக்கொண்டிருக்கும் சிசுவின் மூடிய இமைக்குள் தாய்முலையாய் விரிந்த ஒரு சுவர் பிஞ்சுக் கைவிரலாய் அதில் ஒரு பல்லி பல்லியை அலைக்கழித்து வ...

Thursday, May 5, 2011

பார்த்தல்

ஆளரவமற்ற வனாந்தரத்தின் நீர் விளிம்பில் நின்றிருக்கும் நார்சிசஸ் மலரையும் தன் ஒளியால் துலங்கும் புவிப் பொருளின் அழகையெல்லாம் அணு அணுவாய் ரசித...

Wednesday, May 4, 2011

விரும்பினேன் நான் என் தந்தையே

பேயோ, தெய்வமோ எந்த ஓர் அச்சம் ஆட்டிப் படைத்தது உம்மை என் தந்தையே ”நீ படித்தது போதும் எல்லோரும் மேற்படிப்புப் படித்தேகிவிட்டால் இருக்கும் பிற...

Tuesday, May 3, 2011

ஓநாய்கள்

பசித்த நம் விழிகளில் உணவின்மீது அழுந்தும் பற்களின் அசைவில் ஊறிக் கலக்கும் உமிழ்நீரில் இன்னும் இருக்கிறதோ அது? மிருக மூர்க்கத்திற்கும் கருணைக...

Monday, May 2, 2011

கோயில் கட்டுதல்

எங்கும் இருப்பவனை இங்குதான் இருக்கிறானென எண்ணலும் அறிவாமோ? எங்கும் திரிபவனை இங்கேயெ இரு என்று முடக்குதலும் முறையாமோ? அவனைக் காணல் இன்றி நம்ம...

Sunday, May 1, 2011

நாளின் முடிவில்

களைத்துப்போன என் உடலைப் படுக்கையில் சாய்க்கும் போதெல்லாம் உன்னை உணர்கிறேன். எத்துணை ஆதரவுடன் என்னைத் தாங்குகிறாய் நீ! எத்துணை ஆறுதலுடன் என் ...

Saturday, April 30, 2011

சிற்றெறும்பு

வாசிக்க விரித்த பக்கத்தில் ஒரு சிற்றெறும்பு விரைவது கண்டு தாமதித்தேன். புதிது இல்லை அக்காட்சி, ஒவ்வொரு முறையும் தவறாமல் என் நெஞ்சை நெகிழச் ச...

Friday, April 29, 2011

அது போகிறது போகிறது

ஆயிரம் மனிதர்களோடு நான் அமர்ந்திருக்கையில் மொத்த உலகத் தீமையின் ஆயிரத்திலொரு பங்கு என் தலையை அழுத்தியது நான்கு பேராக நாங்களிருக்கையில் நான்க...

Thursday, April 28, 2011

தென்னைகளும் பனைகளும்

எல்லாத் தாவரங்களும் நீர் விரும்பிகள்தாம் நீர் நிலைகளினருகே இடம் கிடைத்ததால் நெடுநெடுவென வளர்ந்தாள் இவள் சற்றெ வளைந்து ஒயில்காட்டி நின்றாள் எ...

Wednesday, April 27, 2011

நதிகளும் நம் பெருங்கோயில்களும்

முடிவற்ற பொறுமையும் நிகரற்ற ஆளுமையுமாய் ஒளிரும் மலைகள் முழுமை நோக்கி விரிந்த மலர்கள் ஒளி விழைந்து நிற்கும் மரங்கள் செல்லக் குழந்தைகளாய்த் தி...

Tuesday, April 26, 2011

பனைகள்

பனைகளின் தலைகளெங்கும் பறவைகளின் சிறகுகள் பச்சைப்பனைகளின் நடுவே ஒரு மொட்டைப் பனை மொட்டைப்பனை உச்சியிலே ஓர் பச்சைக்கிளி அடங்கிவிட்டது 'மரண...

எருது

அமர்ந்து அசைபோடும் மரநிழலையும் மறந்து வானமும் பூமியுமாய் விரிந்த நிலக் காட்சியில் ஒன்றிவிட்டனை! ஏது தீண்டிய அரவம் உன் தோள்பட்டைச் சதையில் தி...

Monday, April 25, 2011

தாழிட்ட கதவின் முன்

1 தாழிட்ட கதவின்முன் நிற்கும் மனிதனிடம் ஓடிவந்து “இந்தாங்க மாமா“ எனத் தன் பிஞ்சுக் குரலுடன் நீட்டுகிறது அண்டை வீட்டுக் குழந்தை அனைத்துப் பிண...

பன்னீர் மரக் கன்று

நான் தேடிய நல்ல உயரமான ஒரு பன்னீர்க் கன்றை தான் வைத்திருப்பதாயும் தரக்கூடியதாயும் சொன்ன எனது மாணவச் சிறுவனின் வீட்டையும் அந்தக் கன்றையும் நே...

Sunday, April 24, 2011

மலை

மலை உருகி பெருக்கெடுத்த நதி மடியுமோ நிரந்தரமாய் ? அவ்வளவு பெரிய கனலை வெளிப்படுத்த வல்லதோ ஒரு சிறு சொல் ?

பைத்தியம்

உன் வாசலுக்கு நான் வந்தபோது நீ வெளியே சென்றிருந்தாயோ? சற்றுநேரம் உன் இருக்கையில் அமர்ந்தேன் உன் மெத்தையில் புரண்டேன் உன் ஆடைகளை அணிந்தேன் உன...

Saturday, April 23, 2011

ஓராயிரம் வாட்கள்!

நான் பார்க்கவில்லை என நினைத்து இரண்டு குட்டிப் பையன்கள் மூலையிலிருந்த பெருக்குமாற்றிலிருந்து இரண்டு ஈக்கிகளை உருவி வாள் சண்டை போட்டுக்கொண்டி...

அலுவலகம் போகாமல் வீட்டில் தங்க நேர்ந்துவிட்ட ஒரு பகல் வேளை

அன்றுதான் வீட்டை நான் முதன்முதலாய்க் கவனித்த்து போலிருந்த்து. தன் இரகசியத்தை முணுமுணுக்கும் வீட்டின் குரலாய் சமையலறையில் புழங்கும் ஒலிகள். வ...

Friday, April 22, 2011

அக்கரை இருள்

நதி என்னை அழைத்தபோது நதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில் நடை விரிப்பாய் விரிந்திருந்தது பாறையின்மேலிருந்த என் அறையின் விளக்கொளி இருண்டிருந்த ...

நீயும் நானும்

ஒரு தேநீர்க் குவளையை நீ கொண்டுவரும் பக்குவம் கண்டு பெருவியப்பும் பேரானந்தமும் கொள்கிறது இந்த வையகம் நான் பருகுகிறேன் எனது மொத்த வாழ்வும் இப்...

Thursday, April 21, 2011

மேகம் தவழும் வான்விழியே

மேகம் தவழும் வான்விழியே உன் தனிப்பெரும் வியக்தியை துக்கம் தீண்டியதெங்கனம் ? எதற்காக இந்தப் பார்வை வேறு எதற்காக இந்தச் சலனம் ? அன்பான ஒரு வார...

எத்தனை அழுக்கான இவ்வுலகின்...

கொட்டகை நோக்கிச் செல்லும் காலி குப்பை வண்டியின் உள்ளே ஆறஅமர கால்மடித்து அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டு வண்டியசைவுக்கு அசையும் தன் ஒத்திசைவ...

Wednesday, April 20, 2011

நான் அவன் மற்றும் ஒரு மலர்

புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும் வெளியில் சின்னஞ்சிறியதும் தன்னந்தனியனுமான ஓரு சுடராய் நான் நிற்கையில் ஒரு சிறு துடுப்போடு கடலை அழ...

பனித்துளிகள்

1. அந்திவரை வாழப் போகும் பூவின் மடியில் அந்தக் காலைப் பொழுதிலேயே மடிந்துவிடப் போகும் பனித் துளிதான் எத்தனை அழகு! 2. மலரின் நெடிய வாழ்க்கையில...

Tuesday, April 19, 2011

தேவதேவனின் பிரக்ஞை உலகம் - காலப்ரதீப் சுப்ரமணியன்

தேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக...

பயணம்

அசையும்போது தோணி அசையாதபோதே தீவு தோணிக்கும் தீவுக்குமிடையே மின்னற் பொழுதே தூரம் அகண்டாகார விண்ணும் தூணாய் எழுந்து நிற்கும் தோணிக்காரன் புஜ வ...

Monday, April 18, 2011

பட்டறை

என்னை அழைத்துவந்து என் பெயரை ஏன் கேட்கிறாய் ? என்னை நீ அழைப்பதற்கு என் பெயர் உனக்கு தேவைப்படவில்லையே ? எனக்கு நீ இட்ட பணி எதுவென நான் அறிவேன...

வேலி

வீடு திரும்பிக் கொண்டிருந்தேன் என் பத்தினி இவள் காயப்போட்ட சிவந்த ஈரச்சேலை பற்றி எரிந்துகொண்டிருந்தது வேலி

Sunday, April 17, 2011

சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்...

ஒரு பறவை நீந்துகிறது சொற்களை வாரி இறைத்தபடி சொற்களை வாரி இறைப்பதனாலேயே அது நீந்துகிறது காற்றின் துணையும் உண்டு நீ இக்கவிதைஅயி வாசிக்கையில் அ...

ஒரு வெண்புறா

‘ஒரு சிறு புல்லும் குளிர்ந்த காற்றலைகள் வீசிவரும் வெளியும் போதுமே. அத்தோடு உன் அன்பு... கிடைத்தால் அது ஒரு கூடுதல் ஆனந்தமே’ உன் நினைவுகளில் ...

Saturday, April 16, 2011

இறையியல்

'ஆண்டவர் முதலில் ஆதாமையும் அப்புறம் அவனுக்கு துணையாக ஏவாளையும்.. ' என்பது ஓர் ஆணாதிக்கப்பொய் ஆண்கடவுள் ஆதாமையும் பெண்கடவுள் ஏவாளையும...

முன்னுரை

இவை கவிதைகள் ஏனெனில் இவை உண்மையைப் பேசுகின்றன நானல்லாத நான் சாட்சி இவற்றை நீ உணரும் போது நீயே சாட்சி இவற்றை நீ பின்பற்றும்போதோ வற்புறுத்தும்...

Friday, April 15, 2011

வெற்றுக்குவளை

வெற்றுக்குவளையை தந்து சென்றவன் வந்து பரிமாறுவதற்குள் என் ஆசைகளால் நிறைத்து விட்டேன் அதனை. துக்கத்தால் நிறைந்துவிட்டது வாழ்க்கை காணுமிடமெங்கு...

எங்கே இருக்கிறேன் நான்?

நிலவைக் குறிவைத்து காலமற்ற வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததும் தவறிற்று, மனிதனைத் குறிவைத்து உலகின் இன்ப துன்பங்களில் உழன்று கொண்டிருந்தது...

Thursday, April 14, 2011

நிசி

இரை பொறுக்கவும் முட்டை இடவும் மாத்திரமே பூமிக்கு வந்தமரும் வானவெளிப்பறவை ஒன்று இட்ட ஒரு பகல் முட்டையின் உட்கரு நிசியுள் பகல் வெளியிப் பாதிப்...

Wednesday, April 13, 2011

வண்ணத்துப்பூச்சி

அன்று மண்ணின் நிறம் என்னை உருக்கிற்று வீழ்ந்த உடம்புகள் கழன்று உறைந்த ரத்தங்கள் இன்னும் மறக்கமுடியாத கொடூரங்களின் எச்சங்கள் அனைத்தும் மன்னிக...

ஒரு துளித் தசைமணம்

கருணையின் மஞ்சுப் பரவல்களூடே உள்ளங்கால்கள் உணரும் சிகரம் பார்வையின் கீழ் ஒரு பள்ளத்தாக்குக் கிரகம் நெஞ்சின் கீழ் ஒரு பேரமைதி நினைவு என ஏதுமி...

Tuesday, April 12, 2011

மாண்புமிகு கடவுளைப்பற்றிய ஒரு கட்டுக்கதை

கடவுளையும் அனுமதிககதபடி அந்த அறையை சுதந்தரித்திருந்தார்கள் அவனும் அவளும் ஆனால் செளகரியமான ஒரு சூக்கும உருவுடன் கடவுள் இருந்தார் அங்கே ஒரு பட...

மரத்தின் உருவம்

மரம் தன் பொன் இலைகள் உதிர்த்து தன் கழுத்துக்கு ஓர் ஆபரணம் செய்துகொண்டிருந்தது. இதுவரை நான் அதன் காலடி என நினைத்திருந்த நிலத்தை அது தன் கழுத்...

Monday, April 11, 2011

இந்தத் தொழில்

கபடமற்றதோர் அன்புடனும் அற்புதமானதோர் உடன்படிக்கையோடும் கடவுளும் சாத்தானும் கைகுலுக்கிக்கொண்டு நிற்பதைக் கண்டேன். கடவுள் முதல்போட சாத்தான் தொ...

அவனுக்குத் தெரியும்

துக்கமா? இல்லை, வெறும் மௌனம் தானா? எதையும் ஊடுறுவக் கூடியதும் எதனாலும் தகர்க்க முடியாததுமான அந்த வலிய மௌனத்தைச் சொல்கிறேன். இல்லை, இந்த மௌனம...

Sunday, April 10, 2011

உருமாற்றம்

அந்த அறையில் மூவர் குடியிருந்தனர் காட்சி -1 சாந்தியும் சந்துஷ்டியும் காட்டும் புன்னகையுடன் தியானத்தில் அமர்ந்திருந்தார் புத்தர் முழுநிர்வாணத...

மகாகாரியம் மகாகாவியம்

மழை பெய்து நீலம் கனிந்த விண்ணின் கீழ் மழை பெய்து பச்சை விரிந்த மணிணின் மேல் புள்ளி புள்ளி இரத்தத் துளிகளாய் விரைகின்றன விரைகின்றன பட்டுப் பூ...

Saturday, April 9, 2011

ஒரு பரிசோதனையும் கவலையும்

கவனத்தை ஈர்க்கும் ஒரே நோக்குடன் குறுக்கும் மறுக்குமாய் அலைந்துகொண்டிருந்தனர் தேவதைகள் பூமியை பரிசோதிக்க மனம்கொண்ட கடவுள் ஒரு மழையை பெய்துவிட...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP